Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக, யாழ். மாவட்டத்திலிருந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கோப்பாய் தொகுதி வலி. மேற்கு பிரதேச சபை, வலி. தென் மேற்கு, வல்வெட்டித்துறை பிரதேச - நகர சபை, பருத்தித்துறை நகர சபை உள்ளிட்ட சபைகளில், பொதுஜன முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தத்தமது விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு வருகின்றனர்.
அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகளை முனனெடுக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்து, யாழ். மாவட்டத்துக்கென அமைப்பாளர்கள் பலரை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Mar 2026
02 Mar 2026