2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

யாழில் ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் யாவும், இன்று (18) முதல் ஆரம்பமாகியுள்ளன என, யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தின் பிரதம ரயில் அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள்; புறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய,  உத்தரதேவி கடுகதி ரயில், காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10க்கு பயணத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்த அவர், யாழ் தேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு பயணத்தை ஆரம்பித்ததாகவும் கூறினார்.

அவ்வாறே, மாலை 6.35க்கு கொழும்பிலிருந்து யாழ் தேவியும் இரவு 11.50க்கு கொழும்பிலிருந்து உத்தரதேவியும், நேற்று சேவைகளை ஆரம்பிக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

ஏனைய ரயில் சேவைகள் 25ஆம் திகதி தொடக்கம், படிப்படியாக ஆரம்பமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியுமெனவும் கூறினார்.

அத்துடன், மேலதிக விவரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும், ரி.பிரதீபன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .