2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

‘யாழ்.பல்கலையில் வேறு தூபிக்கு இடமில்லை’

Gavitha   / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படுமென்றும் அதைத் தவிர, வேறு எந்தத் தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியத்தால், இன்று (19) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் புனரமைக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தூபி, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியாக அல்லாமல், பொதுவான சமாதானத் தூபியாக நிர்மாணிக்கப்படுவதாக கருத்துகள் வெளியாகி வருவதாகவும் இது உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .