Gavitha / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் 4 பேரை 5 இலட்சம் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், புதன்கிழமை (26) பிணை வழங்கினார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில், 27 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களுடைய வழக்கு புதன்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 23 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
46 minute ago