2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வலி. வடக்குக்கு ஐப்பான் அரசியல் ஆலோசகர் விஜயம்

George   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் மரிக்கோ யமமொடோ, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு, வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்;டறிந்தார். மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள், முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தமை என்பது தொடர்பிலும் கேட்டறிந்தார். மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசுக்கும் முன்னைய அரசுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொடர்பிலும் வினாவினார்.

'இரண்டு அரசாங்கமும் ஒரே அரசாங்கம் என்றும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகச் செய்த விடயங்களை இந்த அரசாங்கம் மறைமுகமாகச் செய்கின்றது' என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவன், ஜப்பான் அரசியல் ஆலோசகருக்குத் தெரியப்படுத்தினார்.

யாழ்;ப்பாணத்தில் இன்னமும் 34 நலன்புரி முகாம்கள் இருப்பதுடன், 9 ஆயிரத்து 948 இன்னமும் மீள்குடியமர்த்தப்படவேண்டியுள்ளதாகவும் கூறினார். அத்துடன் மக்களின் தொழில் மார்க்கங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் தொடர்ந்து இருப்பதுடன், வியாபாரங்களையும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக சஜீவன் மேலும் தெரியப்படுத்தினார்.

தொடர்ந்து, வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி முகாமில் வசித்து வரும் மக்களையும் அரசியல் ஆலோசகர் சந்தித்து கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .