Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணத்தின் வட்டு இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு விசேட நிகழ்வுகள், ஞாயிற்றுக்கிழமை( 22) நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளின் ஆரம்ப வைபவமாக காலை 07.30 மணியளவில் விசேட நடைபவனியும், அதனைத் தொடர்ந்து விசேட நிகழ்வாக இரத்ததான முகாமும் இடம்பெறவுள்ளன.
இவற்றுடன் கலை நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளுடன் கூடிய பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
பாடசாலையின் அதிபர் அ.ஆனந்தராசாவின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுகளில், வட்டு இந்துக் கல்லூரியில் கடந்த காலங்களில் கற்பித்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
6 minute ago
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
28 minute ago
35 minute ago