Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
கோப்பாய் பொலிஸ் பிரிவில், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கு 16 சாரதிகளிடம் மொத்தம் 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 2 நாள்களில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி 16 சாரதிகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களில் மூவர் மதுபோதையில் சாரத்தியம் செய்ததுடன் ஏனையவர்கள் உரிய ஆவணங்களின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
16 சாரதிகளும் தம் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக்கொண்டனர்.
மதுபோதையில் சாரத்தியம் செலுத்திய மூவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு மாதம் இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிய ஆவணங்களின்றி சாரதித்தியம் செய்த இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டமும் 10 சாரதிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டமும் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் ஒரே நாளில் போக்குவரத்துக் குற்றங்களுக்கான 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டது.
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago