Super User / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டிருந்த, வடமராட்சிப் பகுதியில் தொண்டமானறு தொடக்கம் தும்பளை வரையிலான கடற்பகுதியில் மீனவர்கள் தொழில் புரியச் சென்று வரும் கடற்பாதைப் பகுதியை (வான் பாதை) ஆழமாக்கும் பணிகளை உரிய அனுமதி பெற்ற பின் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.எமிலியாம் பிள்ளையிடம், யாழ்.மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.தர்மலிங்கம் உறுதியளித்துள்ளார்.
போர் நடவடிக்கைகள், நிஷா புயல் என்பவற்றின் காரணமாக வடமாரட்சிக் கடற்பகுதியில் மீனவர்கள் தொழிலுக்குச் சென்று வர உபயோகிக்கும் கடற்பகுதியில் உள்ள பாதை கற்களால் மூடியிருந்தது.
இதனால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனையடுத்து பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன், வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசம், குறித்த கடற்பாதையை ஆழமாக்கி, கற்களினை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது.
எனினும், உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதால் புனரமைப்புப் பணியை இடைநிறுத்தும் படி சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியிருந்ததால் கடந்த ஐந்து நாட்களாக இப்பணி தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடமராட்சிப் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர், உரிய அனுமதிகளைப் பெற்று, தடைப்பட்டுப் போன புனரமைப்புப் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க வழி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
4 minute ago
13 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
30 minute ago
37 minute ago