2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தீவகப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ தாதியர் நியமனம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)
யாழ்ப்பாணம் தீவகப் பகுதி வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவ தாதிகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் முகமாக மருத்துவ தாதிகளை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்ய நடவடிக்கைகளை யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.

தீவகப் பகுதிகளில் கடமையாற்றக் கூடிய ஓய்வுபெற்ற மருத்துவ தாதிகள் உடனடியாக தமது விண்ணப்பங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு அனுப்பி வைக்கும்படி அறிவித்துள்ளார்.

தீவகத்தில் உள்ள வேலணை, ஊர்காவற்துறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளிலும் மருத்துவ தாதிகளுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--