2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மதில் இடிந்து வீழ்ந்து மாணவன் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

பாடசாலை மதிலில் ஏறி விளையாடிய போது, திடீரென மதில் இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை வடமராட்சி, இமையாணன் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இமையாணன் அ.த.க வித்தியாலயத்தில் பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர், மாலை 5.30 மணியளவில் குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் மதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மழையினால் ஈரமாகியிருந்த மதில், திடீரென சரிந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது வீழ்ந்தது.

இதனுள் அகப்பட்ட குறித்த பாடசாலையில் தரம் 6யி  பயிலும் விதுஷன் அன்ரன் டேவிட்(11) என்ற மாணவன் ஸ்தலத்திலேயே பலியானான்.

அத்துடன் கலைப்பிரியன் விஜயகுமார் (11) என்ற மாணவன் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .