2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தீவகத்தில் பணிபுரிய அரச உத்தியோகத்தர்கள் தயக்கம்: யாழ். மாவட்ட செயலாளர்

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

அரச உத்தியோகத்தர்கள் தீவுப் பகுதியில் கடமையாற்ற தயக்கம் காட்டுவதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் விசனம் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் போது நியமனம் பெறும் சில உத்தியோகத்தர்கள் பின் தங்கிய பிரதேசங்களுக்கு சென்று கடமையாற்ற பின்னடிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

திணைக்களங்களில்; கடமையாற்றும் போது உத்தியோகத்தர்கள் சேவை மனப்பாண்புடன் கடமையாற்றுமாறும், பின்த ங்கிய பிரதேசங்களுக்கு கடமையாற்றுவதற்கு முன் வருமாறும் யாழ். மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னடிப்பினால் நியமன ஒழுங்கமைப்பில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரச நியமனங்கள் பெற்றுக்கொள்ளும் அனேகமானோர் பணி நிலைகள் நிர்ணயிக்கும் போது, அங்கு செல்ல முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் காட்டுவதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .