2020 நவம்பர் 25, புதன்கிழமை

கூட்டமைப்பின் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண  சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் வகையில் ஆரியாலை, புங்கன்குளம் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாநகர உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தின் வீட்டை; துவிச்சக்கர வண்டியில் வந்த மூன்று புலனாய்வாளர்கள் நேற்று புதன்கிழமை படம் பிடித்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் இவர் தொடர்பாக அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், இவர் முன்னாள் போராளியா?, வன்னியில் வசித்தவரா?, இவரின் குடும்ப விபரங்கள் அவர் எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார், எந்த நேரம் வீட்டுக்கு வருவார் என்றும் மாநகர சபை உறுப்பினராக இப்பகுதி மக்கள் வாக்களித்திருந்தார்களா போன்ற பல்வேறு விபரங்களை அவர் கேட்டறிந்து கொண்டதாக வேட்பாளர் விந்தன் தெரிவித்தார்
இந்த அச்சுறுத்தல் தொடர்வில் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்ள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு மாவை கேட்டுள்ளதாக விந்தன் கனகரட்டணம் தெரிவித்தார்.  Comments - 0

  • pathmadeva Thursday, 01 August 2013 07:39 AM

    செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் வேட்பாளர் யாரை அச்சுறுத்தினார் என்று யோசித்தேன்! செய்தியை வாசித்த பின்னர்தான் அவரை வேறு ஆட்கள் அச்சுறுத்தியதாகத் தெரிய வந்தது!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .