2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

யாழில் உற்பத்திசெய்யும் மரக்கறி வகைகளுக்கு சந்தைவாய்ப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
வடமாகாணத்தில் உற்பத்தி செய்கின்ற விவாசாயப் பொருட்களை அய்க்கோ நிறுவனத்தின் ஊடக ஏற்றுமதி செய்து சந்தைப் படுத்துவதற்கான நடவடிக்கையினை வடமாகாண விவசாய திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
 
இதற்கமைய வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பொது நூலக வடமாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
 
விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
 
குறிப்பாக ஐந்து மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரவள்ளி, பச்சை மீளகாய், பப்பாசி, சாம்பல் வாழை போன்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாடு மற்றும் தெற்கில் கூடிய சந்தை வாய்பு அதிகமாக இருப்பதால் இவ்வாறான பொருட்களின் உற்பத்தினை ஊக்குவித்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கலந்துரையாடலில் வடாமகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .