2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கிளி, முல்லை மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கு புதிய கட்டிடம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தொழில் திணைக்களத்திற்கான புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக  வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இதுவரை காலமும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தொழில் திணைக்களத்தின் பணிகள் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தன.

இந்நிலையில் இலங்கை தொழில் திணைக்களத்தினால் சுமார் 50 மில்லியன் ரூபா நிதி புதிய கட்டடங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியிலிருந்து முதற்கட்ட பணிக்காக தலா 22 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடி தொகுதி கொண்ட கட்டடங்கள் இரு மாவட்டங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், இக்கட்டடங்களுக்கான பணிகள் 2014 ஜுலை மாதத்திற்குள் பூர்த்தியாகும் எனவும் அவர் கூறினார்.

தொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கட்டடத்தொகுதி 55 ஆம் கட்டை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான கட்டடத் தொகுதி சித்திராபுரம் பகுதியிலும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--