2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சங்கானை பிரதேச சபைக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

யாழ். வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நா.ஐங்கரன் தலைமையில் வடக்கம்பரை அம்மன் கோவிலில் நடைபெற்ற  மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா  நடைபெற்றது.

நன்கொடையாகக் கிடைத்த 21 மில்லியன் ரூபா நிதியுதவியிலும் கடனாகக் கிடைத்த 11.55 மில்லியன் ரூபா நிதியுதவியிலும்  பிரதேச சபையின் 2.45 மில்லியன் ரூபா நிதியிலுமாக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டது.  2 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் மொத்தமாக 35 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டது.

இந்தத் திறப்பு விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபையின் அமைச்சர்களான பொன்னுத்துரை ஜங்கரநேசன், தர்மராஜா குருகுலராஜா, பாலசுப்பிரமணியம் டெனிஸ்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

வடமாகாண முதலமைச்சர் கலந்துகொண்ட முதலாவது திறப்பு விழா இதுவாகும்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--