2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழை வாள்வெட்டில் மூவர் காயம்; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் மதவடி ஒழுங்கையிலுள்ள  பூதராயர் கோவிலுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை  (01) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில்; படுகாயமடைந்த  மூவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரை செவ்வாய்க்கிழமை (01) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பூதராயர் கோவிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில்  கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இம்மூவரையும்  மறைவான இடத்தில் நின்றிருந்த நபர்கள் வாள்களால் வெட்டியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது மதவடி ஒழுங்கையைச்  சேர்ந்த சிவனடியார் சிவலிங்கநாதன் (வயது 53), சுவாமிநாதன் அரசதாசன் (வயது 44), இ.இராமேஸ்வரன் (வயது 64) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இவ்வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாள்வெட்டில் படுகாயமடைந்த இம்மூவரும் உடனடியாக  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் சிவலிங்கநாதன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய நபர்களை தேடி வருவதாகவும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .