2020 நவம்பர் 25, புதன்கிழமை

யாழ்.மாநகர சபைக்கு சமிக்ஞை வாகனம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென வாகனமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையிடம் சனிக்கிழமை (12) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

உள்ளூராட்சி அமைச்சினால் யாழ். மாநகர சபையின் பயன்பாட்டுக்கென குறித்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

8 மில்லியன் ரூபா பெறுமதியான இவ் வாகனம் குறித்த ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவின் வாகனம் வீதியில் செல்லும் போது ஏற்படக் கூடிய அசௌகரியங்களுக்கு தீர்வு காணும் முகமாக இப்புதிய வாகனம் சமிக்ஞை ஒலி,ஒளியை எழுப்பியவாறு முன்னே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .