2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

முச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கிளிநொச்சி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பாவனைக்கென முச்சக்கர வண்டியொன்று சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டது.

கனடாவில் வசிக்கும் பாலா பாலசிங்கம் என்பவர் இம்முச்சக்கர வண்டியை கையளித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் விளையாட்டு வீரர்களின் உபயோகத்திறகு என யாழ்.ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் ஆசிரியர்களாக பணிபுரியும் திருமதி கிங்ஸ் தம்பதியினரால் 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை (16) வழங்கப்பட்டன.

துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், கால்ப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான உபகரணங்களே இவ்வாறு வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--