Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்
மானிப்பாய் செல்லமுத்து மைதான புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் நிதியானது, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளாமல் திரும்பிச் செல்லவுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமத்துக்கு 1 மில்லியன் ரூபாய் என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செல்லமுத்து மைதானத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைக் கொண்டு மைதானத்தின் ஆரம்பகட்ட புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த மைதானத்தின் நடுவாக கனகசபை வீதி செல்வதால் மைதானம் இரண்டாக பிரிந்துள்ளது. அந்த வீதியை மைதானத்தின் ஓரமாக மாற்றி, மைதானத்தைச் சுற்றி தூண் வேலிகள் அமைக்கும் பணியை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்ட போதும் வீதியை மாற்றியமைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்;.
காலங்காலமாக பயன்படுத்தும் வீதியை மாற்றியமைக்கவேண்டாம் என அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால், வேலி அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதனால் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லவுள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை செய்யவுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025