2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

எனது முகவரியை பகிரங்கப் படுத்திவிடாதீர்கள்: நீதிமன்றில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகள் பலவற்றின் லட்சக்கணக்கான  இரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் இணைத்தளம் மூலம் அம்பலமாக்கி பரபரப்பை ஏற்படுத்திய, அந்த இணையத்தளத்தின் ஸ்தாபகர்  ஜூலியன் அசேஞ் தன்னைப் பற்றிய தகவலொன்றை பகிரங்கமாக்க வேண்டாம் எனக் கோரிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் இடம்பெற்றது.


சுவீடனில் அசேஞ்சுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்நாட்டு நீதிமன்றம் விடுத்தி பிடிவிராந்து காரணமாக அசேஞ் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


செவ்வாயன்று அவரின் பிணை மனு விசாரணைக்கு வந்தபோது தான் பிணையில் செல்லும் காலத்தில் தங்கவிருக்கும் வீட்டின் முகவரியை பகிரங்கமாக்க வேண்டாம் என அசேஞ் கோரினார்.
 

எனினும் அப்படிச் செய்வது ஜூலியன் அசேஞ்சின் பகிரங்க நீதி தத்துவத்திற்கு முரணாக அமைந்துவிடும் எனக்கூறிய நீதவான் ஹோவார்ட் ரிடில் அம்முகவரியை நீதிமன்றத்தில் வாசிக்கச் வைத்தார்.


அதனால் நோர்போல்க்-சபோல்க் எல்லையிலுள்ள கப்டன் வோகன் ஸ்மித் எல்லிங்ஹாம் ஹால் எனும் ஆடம்பர வீட்டின் முகவரி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.


டிசெம்பர் 15 ஆம் திகதி அசேஞ் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதிலும் சுவீடன் அதிகாரிகள் மேன் முறையீடு செய்துள்ளதால் அசேஞ் இன்னும் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.


கடந்த மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதையடுத்து ஜூலியன் அசேஞ்  மீது அமெரிக்கா கடும் ஆத்திரம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிணையில் செல்ல வாய்ப்பு கிடைத்தால் ஜூலியன் அசேஞ் தங்கவுள்ள வீட்டின் தோற்றத்தை படத்தில் காணலாம்.


 


  Comments - 0

  • தமிழ்ச்செல்வன் Saturday, 19 March 2011 12:48 AM

    ஜனநாயக தலைவனின் வீடு.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--