2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி காலமானார்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் தனது 56ஆவது வயதில் காலமாகினார்.

அப்பிள் நிறுவனத்தில் i-Phone மற்றும் i-Pad போன்ற உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை ஸ்டேவ் ஜொப்ஸை சாரும். நீண்டகாலமாக அப்பிள் நிறுவனத்திற்காக உழைத்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் கணைய புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே தனது பதவியை கடந்த ஓகஸ்ட் மாதம் ராஜினாமா செய்துள்ளதாக அப்பிள் நிறுவனத்தின் இயக்குநர் குழாமுக்கு அறிவித்தார்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தினை ஸ்டீவ் ஜொப்ஸ் வழங்கியதுடன் அப்பிள் நிறுவனத்தின் பிரதம செயற்படுத்தல் அதிகாரியான டிம் குக் அவர்களை பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியுயர்த்துமாறும் பரிந்துரைத்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ்வின் இழப்பு அளப்பரியது என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல பெருந்தலைவர்கள் இரங்கல் செய்தியினையும் வெளியிட்டுள்ளனர்.

1991ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஸ்டீவ் ஜொப்ஸ் என அழைக்கப்பட்ட இவரது இயற்பெயர் ஸ்டீவன் போல் ஜொப்ஸ் என்பதாகும்.


  Comments - 0

  • Amirtha Thursday, 06 October 2011 07:40 PM

    தொழிநுட்ப உலகில் மாபெரும் புரட்சியை கொண்டுவந்த மன்னனே... எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--