2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அப்துல் கலாமின் பாதணிகளில் வெடிகுண்டு சோதனை: மன்னிப்பு கோரியது அமெரிக்கா

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய முன்னாள் ஜனாதிபதி  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நியூயோர்க் விமான நிலையத்தில் விமானத்திலிருந்த போது அவரின் கோர்ட்டும் பாதணியும் கழற்றப்பட்டு  சோதனையிடப்பட்டமை குறித்து அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி இச்சோதனை சம்பவம் இடம்பெற்றது.

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதியும் பிரபல விஞ்ஞானியுமான 80 வயதான கலாநிதி அப்துல் கலாம் நியூயோர்க் விமான நிலையத்திற்கூடாக இந்தியா திரும்பினார். விமான நிலையத்தில் வழக்கம்போல் அப்துல்கலாமும் சோதிக்கப்பட்டார்.

அதன்பின் எயார் இந்தியா விமானத்தில் அவர் ஆசனத்தில் அமர்ந்த பின்னர் விமானத்தின் கதவைத் திறந்த அமெரிக்க பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீண்டும் சோதனை நடத்த வேண்டியுள்ளதாக கூறினார். அவர் அப்துல்கலாமின் கோர்ட்டையும் பாதணிகளையும் கழற்றி அவற்றுள் வெடிபொருட்கள் உள்ளனவா என சோதனை நடத்தினார்.

அப்துல் கலாம் இதற்கு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்நடவடிக்கைக்கு அமெரிக்க அதிகாரிகளிடம் எயார் இந்தியா விமான ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன் இது குறித்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

இவ்விடயத்தை அமெரிக்க அரசாங்க நிர்வாக உயர்மட்டத்திடம் கொண்டுசெல்லுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவை இந்திய வெளிவிவகார அமைச்சு பணித்தது.

இவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் மன்னிப்புக் கோரல் கடிதமொன்றை அப்துல் கலாமிடம் புதுடில்லியிலுள்ள அமெரிக்க பிரதித் தூதுவர் கடந்த வார இறுதியில் கையளித்துள்ளார். இத்தகைய கடிதமொன்று அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் அப்துல் கலாம் இவ்வாறு அமெரிக்க விமான நிலையத்தில் முறையற்ற விதமாக சோதிக்கப்பட்டு, அமெரிக்கா மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் கலாநிதி அப்துல் கலாமிடம்  இச்சோதனைச் சம்பவங்கள் குறித்து இன்று திங்கட்கிழமை   செய்தியாளர்கள் கேட்டபோது, "அதை மறந்துவிடுங்கள். அது பேசப்படுவதற்கு பெறுமதியற்ற விடயம்" என தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்


  Comments - 0

 • general sec. Sunday, 20 November 2011 06:22 AM

  There is no need any comments this kind of issues he is face on 2009. but still usa security thinging about the indian goals.

  Reply : 0       0

  ullooran Tuesday, 15 November 2011 02:23 AM

  அமெரிக்காவின் எதிரி முஸ்லிம்கள்தானே! அதான் அப்துல் கலாம் சேரையும் ஒரு புடி புடிச்ச.....

  Reply : 0       0

  nila Tuesday, 15 November 2011 02:28 AM

  மனிதப் பண்பு என்கிறது இதை தான்.

  Reply : 0       0

  meenavan Tuesday, 15 November 2011 02:49 AM

  பைத்தியக்காரரின் செய்கையை, படித்த பண்பாளர் தன்னடக்கத்துடன் பெறுமதியற்றதாக்கி, அமெரிக்க அரசுக்கு செருப்படி வழங்கியுள்ளார். புஷ்ஷுக்கு ஈராக்கில் நடந்த நிகழ்வுக்கு ஈடாக்கலாம்.

  Reply : 0       0

  sano Tuesday, 15 November 2011 03:10 AM

  Great man.

  Reply : 0       0

  ilakijan Tuesday, 15 November 2011 03:49 AM

  சட்டத்தின் முன் அனைவரும் சமன். வெல்டன் அமெரிக்கா.

  Reply : 0       0

  Rajiswaran Tuesday, 15 November 2011 05:50 AM

  இரகசியமாக பெரிய(அணு) குண்டு தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர் என்று யாரும் சொல்லியிருப்பாங்க. அதை அமெரிக்கா காரங்க தப்பா புரிஞ்சிட்டாங்க போல

  Reply : 0       0

  chelvin Tuesday, 15 November 2011 11:19 AM

  மருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் .

  Reply : 0       0

  Edward Tuesday, 15 November 2011 12:21 PM

  He is a Great man. I was able to see him face to face last time when I was in Chennai. He is a simple man also, does not hesitate to shake hands with normal man.

  Reply : 0       0

  ummpa Tuesday, 15 November 2011 02:33 PM

  அவரே ஒரு விஞ்ஞானி ! அவரிடம் சோதனை இட்டு எதனை கண்டுபிடிக்க? அவர் மூளை ஒரு மலை . நினைத்தால் விமானமே குண்டுமழை ஆகிவிடும். முட்டாள்கள் சோதனை ..................!?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .