2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

எனது மகன்களே எனது விமர்சகர்கள்: ராகுல் ட்ராவிட்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள போதிலும் தன் மீதான விமர்சனங்கள் இன்னமும் தொடர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார். தன் சிறு வயது மகன்களிடமிருந்தே தன் மீதான விமர்சனங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குப் பின்புறத்தில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் போது தான் துடுப்பெடுத்தாடும் போது தன்னைப் போல் துடுப்பெடுத்தாட தனது மகன்கள் அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், கிறிஸ் கெயில் போல் துடுப்பெடுத்தாடுமாறு தனது மகன்கள் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இந்தியா போன்ற ஒரு நாட்டில் அனைவருமே கிரிக்கெட் விமர்சகர்கள் என்பதை இது உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கு வெங்காயம், தக்காளி, சீனி போன்றவற்றின் விலைகள் தெரிவதாகத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், பாடசாலைகளில் இடம்பெறும் பெற்றோர் சந்திப்புக்களில் தான் விருப்பத்துடன் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் போது இழந்திருந்த சிறிய விடயங்களை மதிக்கும், வரவேற்கும் இயல்பை மீண்டும் தன்னுள் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்த அவர், மகனுக்கு வீட்டுப்பாடத்திலும் உதவுவதாகத் தெரிவித்தார்.

எனினும் கிரிக்கெட் போட்டிகள் தனக்குத் தேவையானவற்றை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், கிரிக்கெட்டின் காரணமாக உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புத் தனக்குக் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .