2021 ஜனவரி 27, புதன்கிழமை

வில்லியமின் மனைவி கேட்டிற்கு ஹரியின் தோற்றத்தில் குழந்தை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளவரசர் வில்லியம் மனைவிக்கு சிவப்பு நிற தலைமுடியுடன் குழந்தை பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 50 சதவீதத்துக்கும் மேல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு எந்த வடிவில், என்ன நிறத்தில் குழந்தை பிறக்கும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது.

இந்த நிலையில், கேட் மிடில்டனுக்கு பிறக்கும் குழந்தை அதாவது அரச பதவி ஏற்க இருக்கும் 3ஆவது தலைமுறை வாரிசு, சிவப்பு நிற தலைமுடியுடன் பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தை வில்லியம் போன்று கரடுமுரடான தலைமுடி மற்றும் குணாதிசயங்கள் போன்றோ, தாயார் கேட் மிடில்டன் போன்று நீண்ட முன் தலையுடன் இதய வடிவிலான முகம் போன்றோ அக்குழந்தை பிறக்காது என்றும் வில்லியமின் தம்பி ஹரியைப் போன்று சிவப்பு நிற தலைமுடியுடன் அக்குழந்தை பிறக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதற்கு 50 சதவீதத்துக்கும் மேல் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் சுமார் 5 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் மரபியல் சோதனை நடத்தினார்கள்.

அதில், அவர்களது முன்னோர்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளில் 38.3 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சிவப்பு நிறத்திலான முடியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, வில்லியம் - கேட் மிடில்டன் குழந்தைக்கும் சிவப்பு நிறத்தில் தலைமுடி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .