2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கேட் மிடில்டன் வைத்தியசாலையில்

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டனை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்தவருடம் கர்ப்பமான கேட் மிடில்டன் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இங்கிலாந்தின் கென்சங்டன் பகுதியில் உள்ள சென்மேரிஸ் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தனது கணவருடன் வைத்தியசாலைக்கு காரில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இவர்கள் இருவருக்கும் பிறக்கபோகும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரியவில்லை.

குழந்தையின் பிறப்பை அறிவிப்பதற்காக ஊடகங்கள் பல சென்மேரிஸ் வைத்தியசாலையை சுற்றி குழுமியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--