2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மரணத்தின் விளிம்பில் மைக்கல் சூமேக்கர்

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்முலா வண் கார்ப்பந்தயத்தின் நாயகனாக கருதப்படும் மைக்கல் சூமேக்கர் தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அவரின் இழப்பை ஏற்க அவரின் ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் மைக்கல் சூமேக்கர் இன் முன்னாள் போர்முலா வண் வைத்தியர் கரி ஹார்ட்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

ஏழு தடவைகள் போர்முலா வண் சம்பியன் ஆக வெற்றி பெற்றவர் மைக்கல் சூமேக்கர். 45 வயதான மைக்கல் சூமேக்கர் 1991ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை போர்முலா வண் கார்ப்பந்தயத்தில் பங்கு பற்றியவர் எனபது குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்ட போது கற்ப் பாறையுடன் அவரின் தலை மோதுண்டதில் ஹோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதன்போது அவரின் மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதே இவர் தப்புவது கடினம் என வைத்தியர்கள் தெரிவித்து இருந்த போதும் இன்னமும் ஹோமா நிலையில் மைக்கல் சூமேக்கர் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .