2021 மே 12, புதன்கிழமை

2016 இல் பேஸ்புக்கின் செய்மதி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்காவின் பின்தங்கிய பகுதிகளுக்கு இணைய வசதியை வழங்கும் பொருட்டு செய்மதியை ஏவவுள்ளதாக பேஸ்புக்கின் நிறுவுநர் மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸை தளமாக் கொண்ட Eutelsat நிறுவனத்தின் இணைப்பில் எதிர்வரும் வருடம் செய்மதியை ஏவவுள்ளதாக பேஸ்புக் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முழு உலகத்தையும் இணைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதாகவும், இதற்காக, எமது கிரகத்தை தாண்டி பணியாற்றவேண்டி இருந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக மார்க் ஸக்கர்பேர்க், தனது பேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் பேஸ்புக்கின் Internet.org திட்டத்தின் ஒரு அங்கமே ஆகும். பேஸ்புக்கின் Internet.org திட்டம், சில நாடுகளில் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. முக்கியமாக இந்தியாவில் இந்தத் திட்டத்துக்கு கடுமையான கோபத்தை வணிக நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருந்தன. இந்தத் திட்டத்தின் மூலம் பேஸ்புக்குக்கும், அதன் இணைந்த நிறுவனங்களுக்கும் வளர்ச்சியடைந்து வரும் இணைய சந்தையில் நியாயமற்ற அனுகூலத்தை வழங்குகின்றது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இணைய சேவை கிடைக்க கடினமாக உள்ள பிரதேசங்களில் இணைய வசதியை வழங்குவதற்கு Internet.org பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அண்மையில், ட்ரோன்கள் மூலம் இணையவசதி வழங்குவது பற்றியதான முன்மொழிவையும் வெளியிட்டிருந்தது.

Eutelsat நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுப் பகுதியில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .