2021 மே 18, செவ்வாய்க்கிழமை

140 எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள ட்விட்டர்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில விடயங்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்குள் பகிரமுடியாது என்று இறுதியாக ட்விட்டர் உணர்ந்துள்ளது.

தனது பயனர்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு மேலாக ட்விட் செய்யும் பொருட்டு புதியதொரு வசதி தொடர்பாக ட்விட்டர் ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவிர 140 எழுத்துக் கட்டுப்பாட்டை எவ்வாறு அளவிடுவது என்பது தொடர்பாகவும் ட்விட்டரின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது இணைய சுட்டிகள் (Web links) மற்றும் ட்விட்டர் பயனர் ஒருவரினது பெயரை (Twitter Handle) ட்விட் ஒன்றின் 140 எழுத்துக் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பாகவே அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

2013ஆம் ஆண்டிற்கு பின்னர், தற்போது முடிந்த இரண்டாவது காலாண்டுப் பகுதியிலேயே மிகக் குறைவான மாதாந்த சராசரி பயனர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்தே மேற்கூறப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரின் பேச்சாளர் ஒருவரிடம் வினவியபோது, அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எனினும் ட்விட்டர் பயனர்கள் தமக்கிடையே பரிமாறிக்கொள்ளும் நேரடித் தகவல் சேவையில், 140 எழுத்துக் கட்டுப்பாட்டை ட்விட்டர் அண்மையில் நீக்கியிருந்தது.

இந்தத் செய்தி வெளியானவுடன், ட்விட்டரின் பங்குகள் 1.1 சதவீதம் அதிகரித்து 25.53 அமெரிக்க டொலர்களாக இருந்தன. எனினும் இவ்வருடத்தில் 30 சதவீதமான பங்கு வீழ்ச்சியை ட்விட்டர் சந்தித்திருந்தது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .