2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் மோதிய கூகுள் கார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத் தேடல் ஜாம்பவானான கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரொன்று, பஸ்ஸொன்றுடன் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த மாதம் மோதியுள்ளது. எனினும் இதில் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை.

கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரானது மோதலுக்குள்ளானது இது முதற்தடவை அல்ல என்ற போதும், இம்முறையே கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரொன்றினால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட இச்சம்பவத்தில் எங்கு தவறு நிகழ்ந்துள்ளது என அறியும் பொருட்டு கூகுளானது, கலிபோர்னியாவின் மோட்டார் வாகனத் திணைக்களத்துடன் சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

கூகுளின் தலைமையகத்துக்கு அண்மையில் மௌன்டின் வியூவிலேயே கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, மணிக்கு மூன்று கிலோமீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருந்த கூகுளின் Lexus RX450h வகையிலான தானாகச் செலுத்தப்படும் காரானது, மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் சென்று கொண்டிருந்த மாநகரசபை பஸ்ஸுடன் மோதியுள்ளது.

கூகுளின் தானாகச் செலுத்தப்படும் காரும் அதற்குள் இருந்த சோதனைச் சாரதியும் பஸ்ஸானது தனது வேகத்தைக் குறைத்து காருக்கு வழிவிடும் என எதிர்பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தாங்கள் கொஞ்ச பொறுப்பேற்பதாகவும் ஏனெனில், கார் அசையாமல் இருந்திருந்தால் மோதல் இடம்பெற்றிருக்காது என கூகுள் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--