2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மலேரியாவை காவ முடியாத நுளம்பை உருவாக்குவதில் வெற்றி

Super User   / 2010 ஜூலை 17 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}மலேரியா நோய்கிருமியைக் காவமுடியாத நுளம்பை மரபணுமாற்ற முறையில் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அரிஸோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய மரபணுவொன்றை இந்த நுளம்பிற்குள் புகுத்தியுள்ளனர். இதன் மூலம் நுளம்பின் ஆயுட்காலமும் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்பு இனம் எதிர்காலத்தில் சூழலில் விடப்படவுள்ளது. மலேரியா நோயை ஒழிப்பதில் இக்கண்டுபிடிப்பு திருப்புமுனையாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

"இந்த நுளம்பை சூழலில் விடுவதற்கு முன்னர் இந்நுளம்பிற்கு சாதகமான தன்மையையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன" என இத்திட்டத்தின் தலைவரான பேராசிரியர் மைக்கல் ரிச்சல் தெரிவித்துள்ளார்.

சூழலிலுள்ள இயற்கையான நுளம்புகள் இப்புதிய நுளம்பினத்தால் முற்றாக மாற்றீடு செய்யப்படும் நிலை ஏற்படும்போது மலேரியா நோய் ஒழிந்துவிடும் எனக் கருதப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .