Shanmugan Murugavel / 2016 ஜூலை 13 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த தலைமுறை அலைபேசி வலையமைப்பை வேகமாக அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்திலுள்ள சில பாரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5G விஞ்ஞாபனத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
மேற்குறித்த விஞ்ஞாபனமானது, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் 5G அலைபேசி வலையமைப்பை 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்துவதை நோக்காகக் கொண்டது ஆகும். எவ்வாறெனினும் தற்போதைய இணைய நடுநிலைத்தன்மை விதிகளானது, மேற்குறித்த நோக்கத்துக்கு தடையாக இருக்குமெனவும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும் எனவும் குறித்த விஞ்ஞாபனம் தெரிவிக்கிறது.
மேற்படி ஒப்பந்தத்தில், பி.டி, நொக்கியா, ஒரேஞ், வொடாஃபோன், டொச்சே டெலிகொம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்படி விஞ்ஞாபனத்தில் கைச்சாதிட்டுள்ளன.
இணைய நடுநிலைத்தன்மையின் கோட்பாடு என்னவெனில், அனைத்து இணையத் தரவுப் போக்குவரத்தும் சமமாகப் பேணப்படுவதுடன், எந்தவொரு இணைய வழங்குநரும் ஏனைய இணைய வழங்குநரை விட அனுகூலத்தை பெறாமல் இருப்பதாகும். இத்தகைய முறையினாலேயே, இணையத்தில், இலவசமான மற்றும் திறந்த போட்டியை உருவாக்க முடியும் என இதற்காக பிரசாரம் செய்வோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், புத்தாக்கத்தை ஊக்குவிக்கின்ற நடைமுறைக்கேற்ற விதிகளுடன் திறந்த இணையத்துக்கான தேவை குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என்று 5G விஞ்ஞாபனம் தெரிவிக்கின்றது.
5G எனப்படுவது ஐந்தாவது தலைமுறை அலைபேசி வலையமைப்பு என்பதோடு, தற்போதிருக்கின்ற 3G, 4Gஐ விட குறிப்பிடத்தக்களவு வேகமானதும் ஆகும்.
32 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
8 hours ago
8 hours ago