2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன், க. மகாதேவன்

'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு' எனும் ஜனாதிபதி போதை பொருள் நிவாரண தேசிய வேலைத்திட்டம், இன்று திங்கட்கிழமை (11) காலை புத்தளம் நகர மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

போதை பொருள் பாவனை அதிகரித்த பிரதேசமாக காணப்பட்ட மாவட்டங்களின் வரிசையில் மேற்கொள்ளப்படும் ஏழாவது செயற்திட்டமாக இத்திட்டம் புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் புத்தளம் பிரதேச செயலங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரச அதிகாரிகள் போதை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அதிகாரிகள், சமய தலைவர்கள், முப்படையினர், தொண்டர் நிறுவனங்கள் உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை சித்தரித்து மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்கள் என்பன இடம்பெற்றன.

பிரதான நிகழ்வை தொடர்ந்து, புத்தளம் கொழும்பு வீதி, புத்தளம் குருநாகல் வீதி, புத்தளம் மன்னார் வீதி வழியாக விழிப்புணர்வு ஊர்வலங்கள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .