2021 மே 12, புதன்கிழமை

ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாமிடம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன் 

கொழும்பு பாத்திமா முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (14)  நடைபெற்ற இவ்வருடத்துக்கான தேசிய மீலாத் போட்டிகளின் வரிசையில் மகளிருக்கான இடைநிலைப் பிரிவு ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் வட மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய எம்.எம்.சைனப் ஸாரா மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

புத்தளம் பாத்திமா முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவியான இவருக்கு கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றதன் மூலம் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.

இப்போட்டியில் முதலாமிடம் மத்திய மாகாணத்துக்கும் இரண்டாமிடம் கிழக்கு மாகாணத்துக்கும் கிடைத்தன. 

இதேவேளை, சைனப் ஸாரா, கடந்த வருடம் தேசிய மீலாத் போட்டியில் மகளிருக்கான கனிஷ்ட பிரிவு ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் வட மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .