2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் எழுவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

புத்தளம், கற்பிட்டி ஆழ் கடலில் சட்ட விரோதமாக மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழுவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்த குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

குறித்த இந்திய மீனவர்கள் ஏழுவரும் கடந்த மாதம் 29ஆம் திகதி புத்தளம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவு இடப்பட்டிருந்தது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மீண்டும் நேற்று கல்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .