2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 மே 21 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மதுரங்குளி மற்றும் கற்பிட்டி கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், நேற்று வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி மற்றும் கற்பிட்டி கல்வி கோட்டத்துக்குட்பட்ட திகழி அல்மதீனா ஆரம்ப பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடமும், மதுரங்குளி நல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலைக்கு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டிடமும் பாலாவி சிங்கள வித்தியாலயத்துக்கு 60 இலட்சம் பெறுமதியான கட்டடமும், புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலைக்கு 56 இலட்சம் ரூபய்h பெறுமதியான கட்டடமும், புத்தளம் விஞ்ஞான கல்லூரிக்கு 50 இலட்சம் ரூபாவும் எனது வேண்டுகோளுக்கிணங்க மாகாண கல்வி அமைச்சர் குறித்த  பாடசாலைகளுக்கு நிதியொதுக்கீடு செய்துள்ளார்.

குறித்த நிர்மாணப் பணிகள் யாவும் மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும்.

அத்துடன், மதுரங்குளி கோட்டக் கல்விக்குட்பட்ட கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயலயத்தில் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டடமொன்று கடந்த வாரம் கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .