2021 மே 06, வியாழக்கிழமை

பாடசாலைகளில் சோதனை

Niroshini   / 2016 ஜூலை 31 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு நகரில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள  பாடசாலைகளில் பொதுசுகாதாரப் பிரிவினரால் சனிக்கிழமை (30) சுற்றாடலை சோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  நீர்கொழும்பு  மாநகர சபையின் பொதுசுகாதாரப் பிரிவினர், கட்டுநாயக்க பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.  

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையின்போது, நுளம்பு பெருகும் வகையில் பாடசாலை சுற்றாடலை வைத்திருந்த பாடசாலைகள் சிலவற்றுக்கு சிவப்பு அறிவித்தல்  வழங்கப்பட்டுள்ளதாகவும்  மூன்று தினங்களுக்குள்  சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாநகர சபையின் பொதுசுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்படவேண்டும் எனவும் இல்லையேல், குறித்த பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் பொது சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .