2021 மே 08, சனிக்கிழமை

புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவச கண் சிகிச்சை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இலவச கண் சிகிச்சை முகாம், புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது எதிர்வரும் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண் வெள்ளை படலத்திரையினை அகற்றுதல் என்பன இடம்பெறுகின்றன. நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம்பெறுவதாக ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் மௌலவி தாசிம் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை புத்தளம் மாவட்ட பொறுப்பாளர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், என்.ரீ தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துர் ரஷீட், குவைத் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முகைஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மற்றும் சிகிச்சை பெற்றுள்ள நோயாளர்களின் சுக நிலையினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் இந்த இலவச வைத்திய முகாம், காத்தான்குடி பொது வைத்தியசாலையில் இடம்பெறும் என்றும் அங்கு 600 பேருக்கு இலவச கண் சிகிச்சையளிக்கப்படவுள்ளதாகவும் ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X