2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன், எம்.எஸ். முசப்பிர், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் வலயக் கல்விப் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் தலையிட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் விஜேசிங்கவை அச்சுறுத்தியதாகத் தெரிவித்தும் இதனால் அவரைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்றது.

புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவிக் கல்விக் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனையில் கடமையாற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டாக்காரர்கள், புத்தளம் - குருநாகல் வீதி ஊடாக புத்தளம் பிரதான சுற்று வட்டத்தைத் தாண்டி ஊர்வலமாக மீண்டும் கல்விப் பணிமனையை அடைந்தனர்.

'தலையிடாதே, தலையிடாதே கல்வியில் தலையிடாதே' மற்றும் 'கல்வியிலே அரசியலை உட்படுத்தாதே' போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்கார்கள் எழுப்பியதோடு, பல வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X