2021 மே 10, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சமைத்த உணவு வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கபட்டன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்தே, சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் நூஃமான் வரவேற்பு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை; உணவு சமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புத்தளம் பெரிய பள்ளி, இஸ்லாமிய இயக்கங்கள், பொது ஸ்தாபனங்கள்  மற்றும் பொது மக்கள் இணைந்து இந்த உணவு சமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் மணல்குன்று, கடையாக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  சுமார் 700 குடும்பங்களக்கு  இந்த சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X