Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஜனவரி 20 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு இன்று 11 சுயேட்கைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.
புத்தளம் நகர சபைக்கு போட்டியிடவென ஒரு சுயேட்சை குழுவும், ஆனமடுவ பிரதேச சபைக்கு ஒரு சுயேட்சை குழுவும்,கல்பிட்டி பிரதேச சபைக்கு ஒன்பது சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம்.நபீல் தெரிவித்தார்.
இதே வேளை வேட்பு மனு தாக்கல் தினமான இன்று முதல் புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு பிரவேசிக்கும் பாதைகள் மூடப்பட்டு, வாகனங்கள் சோதனையிட்டதன் பின்னரே அப்பாதையால் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணமுடிந்தது. புத்தளம் மாவட்ட செயலகத்ததை சூழ விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலீஸார் மேற்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025