Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் சென் அன்றூஸ் மத்திய மகா வித்தியாலயத்தின் 125ஆம் ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாவது நாள் நிகழ்வும், பரிசளிப்பும் இன்று இடம்பெற்றது.
பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.
காலை 8 மணியளவில் புத்தளம் தபாலக சுற்றுவட்டத்தில் இருந்து பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களின் தலைவா்கள், பாடசாலை மாணவிகளின் பான்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனா்.
பிரதம் அதிதியாக அழைக்கப்பட்டிருந்த வடமேல் மாகான முதலமைச்சர் அதுல் விஜயசிங்க சமூகமளிக்காததால் நிர்வாகத்தினர் அங்கு சமூகமளித்திருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினா் சின்தக அமல் மாயாதுன்னவை முதலமைச்சரின் சார்பில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனா்.
அதற்கமைவாக மாகாண சபை உறுப்பினா் மற்றும் புத்தளம் பிரதேச சபை பிரதி தலைவா் நிமல் பமுனு ஆராய்ச்சி ஆகியோர் முதலமைச்சரினால் திறக்கப்படவிருந்த இரு பெயா் பலகைகளை திறை நீக்கம் செய்தனா்.
125 வருட பூர்த்தியினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவியும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
25 minute ago