2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கடத்தப்பட்ட 14 வயது சிறுமி 9 நாட்களின்பின் சோளச் சேனையிலிருந்து மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரோஹன சந்திரதாஸ)

வென்னப்புவயிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் 14 வயதான மகள் கடத்தப்பட்டு 9 நாட்களின் பின் அநுராதபுரத்திலுள்ள சோளச் சேனையொன்றில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக 20 வயதான இளைஞர் ஒருவரையும் அவ்விளைஞரின் தந்தையையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த இளைஞர் மேற்படி வர்த்தகரிடம் பணிபுரிந்த ஊழியராவார். மேற்படி சிறுமிக்கு உரிய வயதுவந்தவுடன் அவரை திருமணம் செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (LD)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--