2021 மே 15, சனிக்கிழமை

150 கிலோ மீற்றர் வீதியினை அபிவிருத்தி செய்ய 110 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

Super User   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தில் 150 கிலோ மீற்றர் வீதியினை அபிவிருத்தி செய்வதற்காக 110 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கான் தெரிவித்தார்.

விவசாயக் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் வீதிகள் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமையினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக மத்திய அரசு மற்றும் தேச நிர்மாண அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளும் கிடைக்கப்பெறும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .