Menaka Mookandi / 2011 ஜூன் 16 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பொசன் பௌர்ணமி விழாவிற்காக பாணந்துறையிலிருந்து மிஹிந்தலைக்கு வருகை தந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 14ஆம் திகதி பாணந்துறையிலிருந்து வருகை நந்த கஸுன் லக்ஷான் என்ற மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனும் மற்றும் சிலரும் மஹகனந்தராவ குளத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் உயிர்க்காப்பு குழுவினரால் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்குள் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
50 minute ago