2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மாணவனை தாக்கிய ஆறு மாணவர்களுக்கு பிணை

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

குளியாப்பிட்டி பிரதேச பாடசாலை ஒன்றின் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாடசாலையின் பிரதான வாயிலுக்கருகில் வைத்து தாக்குதல் நடத்தி காயப்படுத்திய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அப்பாடசாலையின் ஆறு மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாணவர்களும் குளியாப்பிட்டி நீதவான் கிஹான் அருண பண்டார முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தலா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்களான இம்மாணவர்கள் ஆறு பேரும் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குளியாப்பிட்டி பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தனஞ்ஜன நயனகாந்த எனும் மாணவனையே இந்த ஆறு மாணவர்களும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு மாணவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன்இ அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .