A.P.Mathan / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கற்பிட்டி அனல்மின் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்து தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸ்மா அதிபர் சம்பவ இடத்திற்கு சற்றுமுன்னர் நேரில் சென்று திரும்பியிருக்கிறார்.
தீ விபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் இன்று மாலை நேரில் சென்று ஆராய்ந்ததுடன், அதிகாரிகளுடன் மேலோட்டமான விசாரணையையும் நடத்தியிருக்கிறார்.
புத்தளத்தில் சுற்றுப்புறங்களிலிருந்தும் கொழும்பிலிருந்தும் விரைந்த தீயணைப்பு படையினர் சில மணிநேரத்துக்கு முன்னர் முழுமையாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இத்தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் 2 கிலோமீற்றர்களுக்கு முன்பாகவே திருப்பி அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago