2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

கொழும்பு – புத்தளம் புகையிரதம் தடம்புரண்டது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்க ஜயசிங்க)

நேற்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், புத்தளத்தினை அண்மித்த பங்கதெனிய என்னும் இடத்தில் இரவு 9.10 மணியளவில் புகையிரதப் பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இயந்திர பெட்டியுடன் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் எவருக்கும் சேதம் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. புகையிரதம் தடம் புரண்டதைத் தொடர்ந்து கொழும்பு – புத்தளம் புகையிரதசேவை பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .