2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வீரசொக்கன்)

சிலாபம் ஆனமடு பிரதான வீதியில் அமைந்துள்ள திகான்வெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளும் வானொன்றும் மோதுண்டதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

பங்காதெனிய தெமட்டபிட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பி.டி.அமிலசந்தன (வயது 30) என்பவரே இந்த விபத்தில்  உயிரிழந்தவர் ஆவார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .