2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வட மத்திய மாகாணத்திலுள்ள சகல குறுக்கு வீதிகளையும் காபட் இட்டு சீரமைக்க நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் வட மத்திய மாகாணத்திலுள்ள சேதமடைந்து காணப்படும் சகல குறுக்கு வீதிகளையும் காபட் இட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்கா தெரிவித்தார்.
 
வட மத்திய மாகாணத்திற்குட்பட்ட 1951 கிலோமீற்றர் வீதிகளில் 60 வீதமான வீதிகள் தற்போதைக்கு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் சேதமடைந்து காணப்படும் ஏனைய  சகல குறுக்கு வீதிகளையும் புனரமைப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் ஒரு செயற்பாடக 300 இலட்சம் ரூபா செலவில் விஜிதபுரம் சந்தியிலிருந்து கலாவௌ வரையான புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பேர்டி மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .