Suganthini Ratnam / 2010 நவம்பர் 10 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
புத்தளம் மாவட்ட கடல் பிரதேசங்களில் எட்டு புதிய இறங்குதுறைகள் அமைக்கப்படவுள்ளன. வடமேல் மாகாண கடற்றொழில், வீதி அபிவிருத்தி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தெரிவித்தார்.
இப்பணிக்காக தமது அமைச்சின் மூலம் இருபத்தி மூன்று இலட்சத்து எண்பத்தி ஒன்பது ஆயிரத்து எண்ணூற்றி பதின்மூன்று ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் குறிஞ்சிப்பிட்டி, முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் கந்ததொடுவா மற்றும் முக்குத்தொடுவா, ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகப் பிரிவின் சின்னப்பாடு கருக்குபனை மற்றும் கண்ணாடிவலை, சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் அளுத்வத்தை மற்றும் சிலாபம் வெல்ல, மாராவில பிரதேச செயலகப் பிரிவில் பருதெல்பொல போன்ற பகுதிகளிலேயே புதிதாக படகு இறங்குதுறைகள் அமைக்கப்படவுள்ளன.
14 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago